காஷாவில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய தடுத்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காஷாவில் யுத்த சூழல் நிலவியது. இந்நிலையில் இரு தரப்பும் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ள நிலையில் காஷாவில் போர்நிறுத்தம் அமுலாகியுள்ளதாக கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காஷாவில் அமுலாகியுள்ள யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் நீடிக்குமென உறுதியாகியுள்ளது.
பலஸ்தின மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதுடன், பயணக்கைதிகள் உடனடியாக தமது குடும்பத்தினருடன் இணைவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.