ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்:

உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர் பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம்:

சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடகம்:

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்ப தற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்மம்:

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக் காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகி விடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். வியாபாரத் தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆன்மிகம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வருடாந்த
ஆன்மிகம் பஞ்சாங்கம் ராசிபலன்

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – ஜனவரி 19, 2025 ஞாயிறு

மேஷம்: உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர் பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்