உள்ளூர் செய்திகள் செய்திகள்

படலந்தை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

படலந்தை ஆணைக்குழுவின் அறிக்கை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயகவினால் இன்று (14) பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரஓவையினால் இந்த பட்டலந்தை அறிக்கை தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கொள்கைத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சர் விமல் ரத்நாயக்க இங்கு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அறிக்கையை தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆணைக்குழுவின் அறிக்கையை முன்வைத்த சபை முதல்வர் இங்கும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

தலைமறையின் மனசாட்சி கட்டுப்பத்தும் இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பதற்கும் மக்கள் மயப்படுத்துவதற்கும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களை நடத்திய தலைமுறையின் கண்ணீர் அவர்கள் அனுபவித்த பூமி அறிந்த வேதனைகள் மற்றும் சோதனைகள் அவற்றுக்கு அர்த்தம் தெரிவிப்பதற்கு 208 பக்கங்களுடன் காணப்படும் இந்த அறிக்கைக்கு முடியாது என்பதை நாம் அறிவோம்.

இந்த அறிக்கை கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களின் பாசமிக்க அவர்களுடைய வேதனைகள் மற்றும் பெருமூச்சுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிக்கையாக அதனைத் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

2024 செப்டம்பர் மாதத்தில் ஜனாதிபதி செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கை 25 வருடங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாக சபை முதல்வர் குறிப்பிட்டார்.

தமது அரசியல் நோக்கங்களுக்காக நாடொன்று பல யுகங்களாக முற்றிலும் அழித்துச் செல்லப்பட்டுள்ளது. எவ்வாறு எனில், ஜனநாயகத்திற்குக் கிடைத்த மக்கள் வரத்தை தமது வகுப்பு நண்பர்களுக்காக பலிக்கடாவாக்க முடியுமா என்பது தொடர்பாக இந்த அறிக்கை ஒரு வாழும் சாட்சியாகும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன