உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான KRI DIPONEGORO – 365 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்’ – 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இரவு மூன்று நிக்காயவினதும் அதிவணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரரர்களின் ஆசீர்வாதங்களுடன், மகாவிஹார பரம்பரையின் சியாமோபாலி மகாநிகாயவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் அதிவணக்கத்துக்குரிய மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான நாயக்க தேரரின் வழிகாட்டலின்படி பிரித் தர்ம உரை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

அத்துடன், சர்வமத அனுஷ்டானங்கள் இன்று (04) காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது.

கொழும்பு 03, பொல்வத்தவில் உள்ள தர்மகீர்த்தயாராமய விகாரையில் பௌத்த மத ஆராதனைகள் இடம்பெற்றன.

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்தரிக்காளி கோவிலில் இந்து மத ஆராதனைகள் இடம்பெற்றன.

கத்தோலிக்க மத ஆராதனைகள் பொரளை புனித அனைவர் தேவாலயத்தில் இடம்பெற்றன.

கிறிஸ்தவ மத ஆராதனைகள் கொழும்பு 06, பிரேஸ்படேரியன் தேவாலயத்தில் இடம்பெற்றன.

வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய ஆராதனைகள் இடம்பெற்றன.

இதேவேளை, 77வது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் உள்ள மாண்புமிகு டி.எஸ். சேனநாயக்க அவர்களின் உருவச்சிலைக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இன்று (04) காலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன