உள்ளூர் செய்திகள் செய்திகள்

அனுராதபுர மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்குக் காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாகக் கண்டறியப்பட்டது

அனுராதபுர மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்குக் காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாகக் அனுராதபுரம் மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாக மற்றும் “சிட்டி பிராண்டிங் (City Branding) முறையை பயன்படுத்தி அனுராதபுர நகரை சுற்றுலா கவர்ச்சி மிகுந்த தலமாக உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அனுராதபுர மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம், காட்டு யானை பிரச்சினைகள் உட்பட பல துறைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தரும் அனுராதபுர நகரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடுவதற்கு சிறந்த வாய்ப்பு காணப்படுவதுடன் இலங்கையின் முதலாவது இராசதானி மற்றும் வாவி அமைந்துள்ள இடமாக வெளிநாட்டவர்களின் கவர்ச்சி கரமான இடமாக பிரதிபலிக்கச் செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டது.

சமூக மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன் போது தெளிவு படுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன