ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் கிக்கட் அணியினர் அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பங்கேற்க...

நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் கிக்கட் அணியினர் அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பங்கேற்க இன்று விஜயம்

0Shares

நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின்  (Maris Stella College) பழைய மாணவர் கிரிக்கட் அணியினர் அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று புதன்கிழமை (4)   அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்;கின்றனர்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை (3) இரவு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் உப அதிபர் ரஞ்சித் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலியா செல்லவுள்ள அணியினர் அனைவரும் பங்குபற்றினர்.

40 ஓவர்களைக் கொண்ட இரண்டு போட்டிகளும், 20 ஓவர் கொண்ட ஒரு போட்டியும்  அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் இடம்பெறவுள்ளதாகவும், அவுஸ்திரேலியாவில் உள்ள மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் கிரிக்கட் அணியினருடன் இரண்டு போட்டிகளும், அங்கு பிரசித்தம் பெற்ற UTSC அணியினருடன் 40 ஓவர்களைக் கொண்ட ஒரு போட்டியிலும் பங்குபற்றவுள்ளதாகவும், போட்டிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி , 8 ஆம் திகதி மற்றும் 14 ஆம் திகதி ஆகிய சனி ஞாயிறு தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும், UTSC அணி பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ், இலங்கை ஆகிய நாட்டு வீரர்களைக் கொண்ட அணி எனவும் அணியின் தலைவர்  விராஜ் ஜயசுமன தெரிவித்தார்.

மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் சங்க விளையாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டில் 20 வருடங்கள் நிறைவடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிரிக்கட் அணியினர் போட்டிகளின் போது அணியும் உத்தியோகப்பூர்வ சீருடைகள் ஊடகங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments