ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி ஓரம் கட்டப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசியல் பிரதிநிதிகள்

நீர்கொழும்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி ஓரம் கட்டப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசியல் பிரதிநிதிகள்

0Shares

நீர்கொழும்பு தலாதூவ பிரதேசத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாது ஓரம் கட்டப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

தலாதூவ அருணோதய குசும் வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும்,நல்லாட்சி அரசாங்கமும் இதுவரை தம்மை கண்டுகொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நகர அபிவிருத்தி மற்றும் பிரஜா பூமிஅபிவிருத்தி அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்தனவினால் ‘குடிசைகள்அற்ற நகரம்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 2008 ஆம்ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு தலாதூவ பகுதியிலுள்ளஅருணோதய குசும் வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு நீர்கொழும்பில் சுத்திகரிப்புப் பணிகளில்(நகரசபை பணியாளர்கள்)  பரம்பரைபரம்பரையாக பணியாற்றிவரும்  குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டன.

86 வீடுகள் இதன்போது பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டதுடன் 24 குடும்பங்களுக்கு பின்னர்வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியும் அப்போதைய அட்சியாளர்களால் அளிக்கப்பட்டது.

எனினும் இதுவரைஅவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில் வீடுகள்அற்றவர்கள் அருகில் உள்ள காணியில் தற்காலிகமாக வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் 140 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த 800 க்கும் மேற்பட்டவர்கள் வசித்துவரும் நிலையில் அவர்களில் 80 சதவீதத்தினர் தமிழர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இங்கு வசிப்பவர்களில் 90 சதவீதத்தினருக்கும்மேற்பட்டவர்கள் நீர்கொழும்பு மாநகர சபையில் சுத்திகரிப்பு தொழிலாளர்களாகபணியாற்றுவதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு மாநகரத்தின்அனைத்து கழிவுகளையும் அகற்றி சுத்தமாக வைத்திருக்கும் தாம் வாழும் இடத்தில், வடிகால்கள்புனரமைப்பு செய்யப்படாமலிருப்பதன் காரணமாகவும்,சரியாக அமைக்கப்படாததன் காரணமாகவும் வடிகால்களில் சாக்கடை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேவேளை சிலவீடுகளில் கழிவு நீரும் மலசல கழிவுகளும் ஒன்று சேர்ந்து வடிகால்கள் ஊடாகசெல்வதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சிறுபிள்ளைகள்கர்ப்பணித் தாய்மார்கள் அடிக்கடி நோய்களுக்கு உள்ளாவதாகவும் அவர்கள்சுட்டிக்காட்டுகின்றனர்.

வீடுகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடங்கள் உரிய முறையில்கட்டப்படாததாலும் மோசமான சுகாதாரபிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் தாம், வீடுகளின்சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, பாதுகாப்பற்றமுறையில் மின்சார வயர்கள் இருப்பதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புஅதிகம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நீர்கொழும்பின் சாக்கடைகளை அகற்றி சுத்தமாகவைத்திருப்பதற்காக உழைக்கும் இந்த மக்களது அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்து, ஏனையவர்களைப்போல் அடிப்படை வசதிகளுடன் நிம்மதியாக வாழ வழிசெய்ய வேண்டும் என்பதும், வீட்டு வசதிகள் இன்றி இருக்கும் 24 குடும்பங்களுக்கு உடனடியாகவீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே தலாதூவ அருணோதய குசும்வீடமைப்புத் திட்ட மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

நீர்கொழும்பு  தமிழ் அரசியல் பிரதிநிதிகளே இது உங்களின் கவனத்திற்கு 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments