ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு மாநகர சபை மேயராக தயான் லன்ஸா அவர்கள் தெரிவாவதர்க்கு அதரவு தெரிவித்தவர்கள் யார் யார்? (படங்கள்,காணொளி)

நீர்கொழும்பு மாநகர சபை மேயராக தயான் லன்ஸா அவர்கள் தெரிவாவதர்க்கு அதரவு தெரிவித்தவர்கள் யார் யார்? (படங்கள்,காணொளி)

0Shares

கடந்த மாதம்  10ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் மூலமாக நீர்கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 48 உறுப்பினர்களில் மாநகர முதல்வரையும் (மேயர்) துணை முதல்வரையும் தேர்வு செய்யும் நிகழ்வு இன்று(23)   மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சந்ராணி சமரகோன் தலைமையில், நீர்கொழும்பு மாநகர சபையின் கூட்ட மண்டபத்தில், நடைபெற்றது.

இரண்டு பதவிகளுக்கான வாக்கெடுப்புகளும் பகிரங்க வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

இம் முறை நீர்கொழும்பு மாநகரசபைக்கு

(ஐ,தே,க19) ,(பொ,ஜ,பெரமுன 16), (சு,கட்சி6), (ம,வி,மு3), (ஐ,தே,சு,மு1), (அ,இ,ம,க1), (சு,குழுகள் 2) தெரிவு செய்ய பட்டுள்ளனர்.

இவ் உறுப்பினர்களில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த  ரொயிஸ் பெர்னாந்து அவர்களின் பெயரும் ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த  வர்ணகுல மோஸஸ் தயான் லன்ஸா  அவர்களின் பெயரும்    இரண்டு   கட்சியினதும் உறுப்பினர்களால்  பரிந்துரை செய்யப்பட்டது

வாக்கெடுப்பில் தயான் லன்ஸா அவர்களுக்கு அதரவாக ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன கட்சி  உறுப்பினர்கள் 16  வாக்குகளும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 5  வாக்குகளும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்1 வாக்கும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் 1 வாக்கும் சு,குழுகளை  சேர்ந்த உறுப்பினர்கள் 2  வாக்குகளும் சேர்த்து  மொத்தமாக 25  வாக்குகள் வழங்கினார்கள்

ஐக்கிய தேசிய கட்சியை சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட  ரொயிஸ் பெர்னாந்து அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 18 வாக்குகளும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் 1 வாக்கும் சேர்த்து  மொத்தமாக 19 வாக்குகள் வழங்கினார்கள்.

இதில் 25க்கு 19 என்ற அடிப்படையில் 6 வாக்குகள் அதிகம் பெற்று நீர்கொழும்பு மாநகரசபை முதல்வராக (மேயர்)  தயான் லன்ஸா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். 

வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர்   சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை

துணை முதல்வர் பதவிக்கு( பிரதி மேயர்)  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த M.A.S. பரீஸ் அவர்களின் பெயரும் ,     லலித் டென்சில் அவர்களின் பெயரும் ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன கட்சி  உறுப்பினர்களாலும் ஐக்கிய தேசிய கட்சியை உறுப்பினர்களாலும் பரிந்துரை செய்யப்பட்டது.

வாக்கெடுப்பில் M.A.S. பரீஸ்  அவர்களுக்கு அதரவாக ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன கட்சி  உறுப்பினர்கள் 16  வாக்குகளும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 4  வாக்குகளும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்1 வாக்கும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் 1 வாக்கும் சு,குழுகளை  சேர்ந்த உறுப்பினர்கள் 2  வாக்குகளும் சேர்த்து  மொத்தமாக 24 வாக்குகள் வழங்கினார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட  லலித் டென்சில்  அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி 18 வாக்குகளும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் 1 வாக்கும் சேர்த்து  மொத்தமாக 19 வாக்குகள் வழங்கினார்கள்.

இதில் 24க்கு 19 என்ற அடிப்படையில் 5 வாக்குகள் அதிகம் பெற்று நீர்கொழும்பு மாநகரசபை            துணை முதல்வராக (பிரதி மேயர்) M.A.S. பரீஸ்  அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். 

வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர்   சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 1 உறுப்பினரும் வாக்களிக்கவில்லை.

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments