நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை (1920-2020) முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (2-2-2020) காலை மாபெரும் நடைபவனி நடைபெற்றது.
இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் உட்பட ஆறாயிரத்துக்கும் (6000) மேற்பட்டோர் பங்குபற்றினர்.
கல்லூரி அதிபர் உரையாற்றும்போது,
கம்பஹா மாவட்டத்தில் மூன்று மொழிகளிலும் கற்பிக்கும் ஒரே ஒரு மும்மொழி முஸ்லிம் பாடசாலை நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி எனவும், இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கு பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக இன்று காலை தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
அத்துடன் 101 ஆண்டில் காலடி வைத்துள்ள பாடசாலையின் நூற்hண்டு விழா இலக்கு கல்வி மறுமலர்ச்சியை நோக்கி பயணிப்பதாகும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதி அமைச்சர் நிமல் லான்ஸா, மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.ஏ. இஸட். பரீஸ், பொலிஸ் அதிகாரிகள், கல்லூரியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபற்றிய நடைபவணி ஆரம்பமானது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் உட்பட பலரும் பங்குபற்றினர்.