ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்.

நீர்கொழும்பு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்.

0Shares

இதுவரைகாலமும் மாகாண அமைச்சின் கீழ் மாவட்ட வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்று தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை(14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் எமக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகாமையில் மூலோபாய வீதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை மூலம் அதனை உள்ளடக்கும் பிரதேசத்தை போன்று அண்டிய பகுதியில்லுள்ளவர்களுக்கும் வைத்தியசாலைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த வைத்தியசாலையின் மூலம் விமனநிலையத்திற்கு வருகைதரும் புலப்பெயரும் பயணிகளுக்கும் கடற்படை பயணிகளைப் போன்ற சுற்றுலா பயணிகளுக்கும் வைத்தியசேவை வழங்கப்படுகின்றது.

இந்த வைத்தியசாலை டெங்கு முகாமைத்துவ மத்திய நிலையம் டெங்கு மற்றும் செந்நிற டெங்கு காய்ச்சல் சிகிச்சை ஆகியவற்றின் முகாமைத்துவத்திற்க்கக சிறந்த மத்திய நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் உள்ள வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்க்காக இதனை சகல அமைச்சுகளினதும் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த வைத்யசாலையை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பு ஏற்பதற்க்காக சுகாதர மற்றும் சுதேச வைத்திய சேவை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் பலவருடங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மட்டுமே தேசிய வைத்தியசாலையாக செயற்பட்டு வந்தநிலையில் கடந்தவருடம் கண்டி வைத்தியசாலை கடந்த அரசாங்கத்தினால் தேசிய வைத்யசாலையாக தரமுயர்த்தப்பட்டது இந்நிலையில் இலங்கையில் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக அங்கீகாரம் பெறப்போவது நீர்கொழும்பு வைத்தியசாலையாகும்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments