ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது. (மேலதிக செய்தி)

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது. (மேலதிக செய்தி)

0Shares

ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீர்கொழும்பு நகரில் வைத்து கட்டான காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டு பெண்ணொருவருக்கு சொந்தமான வீடொன்றிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியமை மற்றும் அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றமை ஆகிய முறைப்பாடுகளுக்கமைய அவர் பிரதான சந்தேகநபராக கைது செய்யபபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவர் ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ நாளை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ என்பவர் கடந்த சிலவருடங்களுக்கு முன் நீர்கொழும்பில் நகைக்கடை ஒன்றை கொள்ளையிட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் தினைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட எங்கள் செய்தி ஊடகத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் what’s appல் பெற்று கொள்ள கீழே உள்ள லின்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளவும் (குழு நிர்வாகத்தினர் மட்டுமே செய்திகள் அனுப்ப முடியும் ஆகவே எந்த வித தொந்தரவும் இருக்காது)

Whatsapp ல் செய்திகள் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments