பர­ப­ரப்­பான அர­சியல் சூழலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குழு இன்று கூட­வுள்­ளது. இதன்­போது கட்­சி­களின் முக்­கிய பத­வி­க­ளுக்கு யாரை நிய­மிப்­பது என்பது குறித்து ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இன்று பிற்­பகல் 2.30 மணிக்கு ஐக்­கிய தேசிய கட்சி மறு­சீ­ர­மைப்பு குழு அல­ரி­மா­ளி­கையில் கூட­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியை  மறு­சீ­ர­மைப்பு செய்­வது குறித்து உள்­ளூ­ராட்சி மன்றத்தேர்­தலின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இருந்து வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இதன்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு பின்னர் கட்­சியில் மறு­சீ­ர­மைப்­பினை செய்­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தீர்­மா­னித்­தது.

இத­னை­ய­டுத்து நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­ட­தனை அடுத்து கடந்த சனிக்­கி­ழமை கட்­சியின் செயற்­கு­ழுவும் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டமும் கூடின. இதன்­போது கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து பர­வ­லாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்­பினை சுயா­தீ­ன­மாக செய்ய வேண்டும் என்றும் செயற்­கு­ழுவில் பிர­த­ம­ருக்கு ஆத­ர­வா­ன­வர்கள் அதிகம் இருப்­ப­தனால் மறு­சீ­ர­மைப்பு குழு­வினை பாரா­ளு­மன்ற குழுவே தீர்­மா­னிக்க வேண்டும் என்றும் செயற்­குழு கூட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தின் போது இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் மறு­சீ­ர­மைப்பு குழு­வுக்கு உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர்.   குறித்த குழுவில் பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவும் உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்­கவும் தானாக குழுவில் அங்கம் வகிக்க அதி­காரம் பெற்­றுள்­ளனர்.

மறு­சீ­ர­மைப்பு குழு­விற்கு இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் ஹரீன் பெர்­னாண்டோ, ருவன் விஜே­வர்­தன, அகிலவிராஜ் காரி­ய­வசம், ரஞ்சித் மத்­தும பண்­டார, மங்­கள சம­ர­வீர, எரான் விக்­கி­ர­மரட்ன, அசோக பிரி­யந்த மற்றும் நளின் பண்­டார ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டனர். இந்­நி­லையில் கடந்த சனிக்­கி­ழமை நடந்த செயற்­குழு கூட்­டத்தின் போது பொதுச்­செ­ய­லாளர் பத­விக்கு இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரின் பெயரை பெரும்­பா­லானோர் பரிந்­துரை செய்­துள்­ளனர். அத்­தோடு கல்வி அமைச்­சரும் தற்­போ­தைய பிரதி பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான  அகில விராஜ் காரி­ய­வ­சமின் பெய­ரையும் ஒரு சிலர் பரிந்­துரை செய்­துள்­ளனர். அத்­தோடு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­கவின் பெயரை பரிந்­துரை செய்­துள்­ளனர்.

அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சி­யில் அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவும் அவ­ரது மகன் சதுர சேனா­ரத்­னவும் இணை­ய­வுள்­ ளனர். இந் நிலையில் கட்சியின் தவிசாளர், பொதுச் செயலாளர், தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக் கப்படவுள்ளனர்.

பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அலரி மாளிகையில் கூடவுள் ளமை குறிப்பிடத்தக்கது.