கொரோனா நோயாளர்களுக்கு வைத்திய சாலைகளில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் போதிய அளவு விசேட கட்டில்கள் இல்லாமையால் நீர்கொழும்பில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இதுக்கான வேலைத்திட்டம் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த செயட்திட்டம் நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தில் அமைத்துள்ள தொழிற்சாலை ஒன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
இந்த நிலையில், கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவங்ச இந்த கட்டில்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை தனது அமைச்சு மூலம் மேட்கொண்டுள்ளார் என தெரியவந்து உள்ளது