ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்பெண் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம்...

பெண் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு.

0Shares

ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பாக 5 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட 4 பாகிஸ்தான் பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட சந்தேக நபர்கள் போதைப் பொருள் பிரிவால் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த 5 சந்தேக நபர்களில் மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீர்கொழும்பு நீதிமன்றத்தால் நேற்று (19) அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்கள் தொடர்பான விபரங்கள்,

மொஹமட் அஸ்லாம் – 27.08.2017 ஆம் ஆண்டில் 367 கிராம் ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, உடன் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக நீர்கொழும்பு நீதிமன்றம் 557 இன் கீழ் 2019 வழக்கு எண்ணுக்கமைய வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கஹான்ஜி சாகுப்ட்னாஸ் – 29.05.2016 ஆம் ஆண்டில் 260 கிராம் ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, உடன் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக நீர்கொழும்பு நீதிமன்றம் 537 இன் கீழ் 2019 வழக்கு எண்ணுக்கமைய வழக்கு தாக்கல் செய்துள்ளது.

டின் அல்லா – 29.04.2016 ஆம் ஆண்டில் 404 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, உடன் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக நீர்கொழும்பு நீதிமன்றம் 540 இன் கீழ் 2019 வழக்கு எண்ணுக்கமைய வழக்கு தாக்கல் செய்துள்ளது.

மலிக் ஹட்னா ஹப்சால் – சாயிரா கான் – 01.11.2017 ஆம் ஆண்டில் இரண்டு கிலோ 766 கிராம் ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, உடன் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக நீர்கொழும்பு நீதிமன்றம் 539 இன் கீழ் 2019 வழக்கு எண்ணுக்கமைய வழக்கு தாக்கல் செய்துள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments