ColourMedia
WhatsApp Channel
Homeவிளையாட்டுவிளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு மஹேலவின் அதிரடி பதில்

விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு மஹேலவின் அதிரடி பதில்

0Shares

ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் தற்போது நிலவும் முறைமை குறித்து எவ்வித நம்பிக்கையும் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் விதமாக தனது டுவிட்டர் கணக்கில் இதனை பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் ஆலோசகர்களாக இணையுமாறு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹானாம, அரவிந்த டி சில்வா ஆகியோரிடம் விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் வழங்கி சுட்டிக்காட்டியுள்ள மஹேல ஜயவர்தன, ஸ்ரீலங்கா கிரிக்கட் குழுவில் ஒரு வருடமும், விசேட ஆலோசனை குழுவில் 6 மாதங்களும் கடமையாற்றியதாகவும், எனினும் இந்த காலப்பகுதியில் தாம் முன்வைத்த பரிந்துரைகள் எவையும் செயல்ப்படுத்தப்படவில்லை எனவும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் காணப்படும் முறைமை தொடர்பில் தமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதுடன், காலம் தாழ்த்துவதற்காக எங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments