உலகம் உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ‘KRI BUNG TOMO – 357’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டுச் சென்றது

2025 ஜனவரி 31 அன்று விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய கடற்படையின் Multirole Light Frigate ரக ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பலானது, அதன் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 01) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

மேலும், கப்பலின் தளபதி கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மற்றும் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் , ரியர் அட்மிரல் புத்திக லியனககே அவர்களுடன் 2025 ஜனவரி 31 அன்று உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடற்படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

மேலும், ‘KRI BUNG TOMO – 357’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்கு பல பகுதிகளுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன