கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர் , அந்த அறிக்கை கிடைக்க முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆம் மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்கையில் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் நேற்று அதிகாலையிலேயே இடப்பெற்றுள்ளது
நீர்கொழும்பு கடான பிரதேசத்தை சேர்ந்த உடவடுன கங்காணிலாகே லழிந்த சுதத் என்ற 37 வயது ஹெரோயின் சந்தேக கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வருகைதந்த நீர்கொழும்பு பதில் நீதவான் ப்ரீமால் அமரசிங்க உயிரிழந்த கைதியின் பி,சி,ஆர் பரிசோதனை அறிக்கை வெளிவந்ததும் மரண விசாரணை அறிக்கையுடன் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழுலும்பு பொலிஸ்நிலைய உப பொலிஸ்பரிசோதகர் பிரதீப் இந்திக அபேயசேகர அவர்களுக்கு உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா