31 C
Negombo
Saturday, July 11, 2020
Home உள்நாட்டு ஆறுமுகன் தொண்டமான் காலமாக முன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.

ஆறுமுகன் தொண்டமான் காலமாக முன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.

ஆறுமுகன் தொண்டமான், இறுதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.இந்த சந்திப்பு பற்றி ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

கோபால் பாக்லே அவர்களை இன்றைய தினம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களான கௌரவ பிரதமர் அவர்களின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் , முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.கா வின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10000 வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

மற்றும் முன்னைய வீடமைப்பு திட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

- Advertisment -

Most Popular

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...

Recent Comments