31 C
Negombo
Saturday, July 11, 2020
Home உள்நாட்டு நீர்கொழும்பில் நாய் ஒன்றை சுட்டுக்கொன்றவழக்கில் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரின் பிணை இரத்துசெய்யப்பட்டு சிறையிலடைப்பு

நீர்கொழும்பில் நாய் ஒன்றை சுட்டுக்கொன்றவழக்கில் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரின் பிணை இரத்துசெய்யப்பட்டு சிறையிலடைப்பு

நீர்கொழும்பு பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியில் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும் , காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாந்துவின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் மெக்ஸ் (MAX) என்று செல்லமாக அழைக்கப்படும் வளர்ப்பு நாயின் மரணம் தொடர்பான வழக்கு இரண்டாவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை நீர்கொழம்பு பிரதான நீதவான ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பிரதிவாதியாக குற்றம்;சாட்டப்பட்டுள்ளவர் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் கிளமன்ட் பெர்னாந்து என்பவராவார்.

குறித்த நாய் 7-5-2020 அன்று காலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்தார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்தனர்.

இதனை அடுத்து அன்று மாலை சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இன்றயதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபரான ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் கிளமன்ட் பெர்னாந்து என்பவருக்கு வழங்கப்பட்ட பிணை இரத்துசெய்யப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழம்பு பிரதான நீதவான ரஜீந்ரா ஜயசூரிய உத்தரவிட்டார்.

செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா

- Advertisment -

Most Popular

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...

Recent Comments