31 C
Negombo
Saturday, July 11, 2020
Home உள்நாட்டு நீர்கொழும்பு த பீனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு முன் வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

நீர்கொழும்பு த பீனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு முன் வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

காசு வைப்பிலிடுபவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் பணத்திற்கு உத்தரவாதம் வழங்கும் த பீனான்ஸ் என்ற நிறுவனத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வழங்கிய அனுமதிப்பத்திரம் கடந்த 22 திகதி இலங்கை மத்திய வங்கியால் ரத்து செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து த பீனான்ஸ் கிளைகளும் மூடப்பட்டது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!

த பினான்ஸ் கம்பனி பிஎல்சியிற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது 2008இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிலிருந்து கம்பெனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்ததாக மத்திய வங்கி அறிவித்திருந்தது.

கடந்த 22ஆம் திகதி த பீனான்ஸ் நிதி நிறுவனம் மதியவிங்கியினால் மூடப்பட்டதை அடுத்து குறித்த நிறுவனத்தில் நீர்கொழும்பு கிளையில் பணம் வைப்பிலிட்டவர்கள் இன்றயதினம் நீர்கொழும்பு த பீனான்ஸ் முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமரே நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்களே, எங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த அனைவரையும் நாங்கள் நாங்கள் சபிக்கின்றோம், மதியவங்கி 10 வருடங்களாக த பினான்ஸ் நிறுவனத்தால் வழிநடத்தப்பட்டது எம்மை ஏமாற்றவே? போன்ற வாசகங்களை கொண்ட சுலோகங்களை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மதியவங்கி அனுமதி அளித்த நிதிநிறுவனம் என்றபடியாழும் 80 வருடங்கள் நாட்டில் பெயர்கொண்ட நிதி நிறுவனம் என்றபடியாலுமே நாங்கள் கஷ்டப்பட்டு சேகரித்த பெருந்தொகையான பணத்தை இங்கு வைப்பிலிட்டோம், எங்கள் பணத்துக்கு மதியவங்கியும், அரசாங்கமும்மே பொறுப்பு கூறவேண்டும் நாங்கள் அனைவரும் இந்த ஜனாதிபதியை தெரிவு செய்தது நாட்டில் இவ்வாறான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கத்தான் ஜனாதிபதி எங்கள் பணத்தை உடனடியாக மீட்டு தரவேண்டும் அல்லது எங்களுக்கு வீதியில் இறங்கி உயிரைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.

செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா

 

- Advertisment -

Most Popular

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...

Recent Comments