31 C
Negombo
Saturday, August 8, 2020
Home உள்நாட்டு மேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை

மேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை

கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (05) உத்தரவிட்டார்.

இந்த முறைப்பாடு இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகள் நீதவானால் வாசிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான் இரகசிய பொலிஸார் அறிவிக்கும் போது அங்கு சென்று தேவையான வாக்குமூலத்தினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சந்தேகநபர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் குறித்த வழங்கு எதிர்வரும் மே மாதம் 6 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

அரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்

எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...

பொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு

பொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்  

Recent Comments