31 C
Negombo
Saturday, July 11, 2020
Home உள்நாட்டு நல்லவேளை பயணப்பொதிக்குள் கையை விடவில்லை - கட்டுநாயக்க விமான நிலையத்தில்...!

நல்லவேளை பயணப்பொதிக்குள் கையை விடவில்லை – கட்டுநாயக்க விமான நிலையத்தில்…!

நீண்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்குமிங்கும் நடமாடியவாறு காணப்பட்டுள்ளார்.

இதன் போது குறித்த நபரை அவதானித்த கட்டுநாயக்க சுங்கப்பிரிவின் அதிகாரிகள் அவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

அவரின் கடவு சீட்டு இலங்கைக்கு வருகைதந்தமைக்கான காரணங்கள் என அனைத்தும் உரிய வகையில் காணப்பட்டுள்ளது.

ஆனால் விசாரணைகளின் போது குறித்த நபரின் கைகளில் பயணப்பொதிகள் காணப்படவில்லை.

பின்னர் சீனாவிற்கு பயணிக்கவுள்ள விமானத்திற்கான பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பயணிகளுக்கான பொது அழைப்பு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர் பயணப்பொதியுடன் சென்ற வேளையில் சுங்கப்பிரிவினர் பயணப்பொதியினை பரிசோதிக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் குறித்த சீன பயணி விமானத்திற்கு செல்ல வேண்டும் எனவும் நேரம் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும் தெரிவித்து பயணப்பொதியினை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக பயணப்பொதியினை இலத்திரனியல் கருவிகொண்டு பரிசோதனை செய்த போது இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள அரிய வகை தேள்கள் உயிருடன் உள்ளே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த பயணி தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...

Recent Comments