31 C
Negombo
Wednesday, May 27, 2020
Home உள்நாட்டு ஒரே நீதி! இன, மத பேதம் கிடையாது- கோத்தாபய

ஒரே நீதி! இன, மத பேதம் கிடையாது- கோத்தாபய

நாட்டில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உள்ளூர் வணிக சமூகம் எமது ஆட்சியில் முக்கிய பங்கு வகிப்பர் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (25) கோத்தாபய ராஜபக்ஷவின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

நாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி இருக்கும். இதில் இன, மத பேதங்கள் இருக்காது. எனது முழு ஆட்சி காலமும் இந்த தேர்தல் விஞ்ஞாபனமே இருக்கும். வாழக்கை செலவை குறைப்பதே அனைத்து மக்களின் பிரச்சினையாக இருக்கின்றது. அதற்கு உரிய தீர்வை உடனடியாக முன்வைப்பேன்.

உற்பத்திகளை அதிகரித்து மக்கள் மீது சுமத்தப்பட்டுளள வரியை குறைத்து சிறிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளேன். சுற்றுலாத்துறை, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம், விளையாட்டு, கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தி அதனூடாக புதிய தொழில்களை ஏற்படுத்த முடியும்.

உலர் வலய விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை செய்து கொடுப்பேன். தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாயம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவோம். நாம் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் தேவையான தொழிநுட்பத்தை வழங்குவோம். எமது இளைஞர், யுவதிகளை நாம் மீண்டும் விவசாய துறைக்கு உள்வாங்க வேண்டும். பெண்களை உற்சாகப்படுத்தி அவர்களின் ஊடாக போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்ய வேண்டும்.

எனது தலைமைத்துவ அரசாங்கத்தில் ஊழலுக்கு இடமில்லை. மக்களாகிய நீங்கள் கொடுத்த பொறுப்பை சிறந்த முறையில் செய்து முடிப்பேன். மேலும் இலங்கையர் என்ற எண்ணத்தில் அனைவரும் செயற்படுவதற்கான நிலைமையை தோற்றுவிப்பேன் – என்றார்.

- Advertisment -

Most Popular

ஆறுமுகன் தொண்டமான் காலமாக முன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.

ஆறுமுகன் தொண்டமான், இறுதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.இந்த சந்திப்பு பற்றி ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். கோபால் பாக்லே அவர்களை இன்றைய தினம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட...

நீர்கொழும்பில் நாய் ஒன்றை சுட்டுக்கொன்றவழக்கில் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரின் பிணை இரத்துசெய்யப்பட்டு சிறையிலடைப்பு

நீர்கொழும்பு பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியில் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும் , காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாந்துவின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் மெக்ஸ் (MAX)...

நீர்கொழும்பு த பீனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு முன் வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

காசு வைப்பிலிடுபவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் பணத்திற்கு உத்தரவாதம் வழங்கும் த பீனான்ஸ் என்ற நிறுவனத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வழங்கிய அனுமதிப்பத்திரம் கடந்த 22 திகதி இலங்கை...

யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ் சேவைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையினர் பஸ் சேவைகள் அக்கரைப்பற்று, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான பஸ் சேவையை ஆரம்பித்துள்ளனர். இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்...

Recent Comments