31 C
Negombo
Wednesday, May 27, 2020
Home உள்நாட்டு பிரதேச சபை உப தவிசாளருக்கு ரிஐடி அழைப்பாணை

பிரதேச சபை உப தவிசாளருக்கு ரிஐடி அழைப்பாணை

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு நேற்று (23) சென்ற பயங்கரவாத விசாரணை பிரிவினர் அழைப்பாணை கடிதத்தை கையளித்து சென்றுள்ளனர்.

குறித்த கடிதத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் நாளை (25) 10 மணிக்கு இரண்டாம் மாடி, புதிய செயலக கட்டிடம், கொழும்பு 1 எனும் முகவரியில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையை எமது பகுதிக்கு அண்மையில் நடத்தாது கொழும்புக்கு எம்மை அழைத்து செலவுகளையும் மனரீதியான உளைச்சலையும் ஏற்படுத்துகிறார்கள் தவிர நாம் எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் விசாரிப்பதாக இருந்தால் எமது பகுதிக்கு அண்மையில் விசாரிக்க முடியும் எனவும் எதிர்காலத்தில் எம்மைப் போன்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு செய்கிறார்களா எனவும் குறித்து உறுப்பினர் கருத்து தெரிவிக்கும் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் கடந்த மே மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் ச.தவசீலனிடம் அண்மையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. அத்துடன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரனை இன்றைய (24) தின் பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

கொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று தாயகம் வந்தடைந்துள்ளனர்.

கொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று (24) அதிகாலை 5.04 மணியளவில் தாயகம் வந்தடைந்துள்ளனர். இவர்கள் யூ.எல் - 218 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு...

ஆறுமுகன் தொண்டமான் காலமாக முன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.

ஆறுமுகன் தொண்டமான், இறுதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.இந்த சந்திப்பு பற்றி ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். கோபால் பாக்லே அவர்களை இன்றைய தினம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட...

நீர்கொழும்பில் நாய் ஒன்றை சுட்டுக்கொன்றவழக்கில் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரின் பிணை இரத்துசெய்யப்பட்டு சிறையிலடைப்பு

நீர்கொழும்பு பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியில் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும் , காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாந்துவின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் மெக்ஸ் (MAX)...

நீர்கொழும்பு த பீனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு முன் வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

காசு வைப்பிலிடுபவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் பணத்திற்கு உத்தரவாதம் வழங்கும் த பீனான்ஸ் என்ற நிறுவனத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வழங்கிய அனுமதிப்பத்திரம் கடந்த 22 திகதி இலங்கை...

Recent Comments