31 C
Negombo
Saturday, July 11, 2020
Home உள்நாட்டு கண்டி பெரஹர வைபவத்திற்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பு – பிரதமர்

கண்டி பெரஹர வைபவத்திற்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பு – பிரதமர்

கண்டி எசல பெரஹரவின் பாதுகாப்பு ஆகக்கூடிய வகையில் உறுதி செய்யப்பட்டு இம்முறையும் கடந்த ஆண்டுகளைப் போன்று வெற்றிகரமாக பெரஹர வைபவம் நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முடிவுற்றதாக கருதி நாம் கைவிடப்போவதில்லை. விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அஸ்கிரி மகாநாயக்கர் சங்கைக்குரிய வராக்காகொட ஸ்ரீஞானரத்ண தேரர் தலைமையிலான மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் சங்கைக்குரிய திம்புல் கும்புரே விமலதம்ம தேரர், அஸ்கிரி பீடாதிபதி சங்கைக்குரிய நாரங்பனாவே ஆனந்த தேரர், சங்கைக்குரிய திம்பட்டுவாவே வெதங்கர தேரர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

கண்டி எசல பெரஹர பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்ததைகள் நடத்தவதற்காக கண்டி ஸ்ரீ தலதாமாளிகையில் இன்று நடைபெற்ற விஷேட கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.

கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் ஸ்ரீ தலதாமாளிகையில் புனித சின்னங்களை வழிபட்ட பின்னர் இந்த கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,இந்த பின்னணியானது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு உட்பட்ட நிலையாகும். இது சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாம் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். சுமார் 200 பேர் தடுப்பு விசாரணையின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இது முடிவுற்றதாக கருதி நாம் கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தார்.

கண்டி தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி உள்ளோம். பெருமைக்குரிய மகாநாயக்கர் தேரர் தொடர்பில்,விஷேட மத வழிபாட்டு நிகழ்வுகள், விடேமாக பெரஹர உள்ளிட்டவை ஏனைய விகாரைகளிலும் பெரஹராக்கள் நடைபெறவுள்ளன.

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஆலயங்களிலும் விழாக்கள் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் வைபவம் நடைபெறவுள்ளன. இவ்வாறாக மூன்று மத வைபவங்கள் நடைபெறவுள்ளன.

கண்டி தலதாமாளிகை பெரஹரவிற்கு நாம் முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும். கதிர்காம ஆலய திருவிழாவிற்கு சென்றிருந்த போது பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். சனிக்கிழமை என்பதினால் பெரும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இங்கு பெரும் எண்ணிக்கையிலானோர் வருவார்கள். இதற்கான பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்

சார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது!

ஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...

Recent Comments