ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஇன்றைய முக்கிய செய்திகள்.

இன்றைய முக்கிய செய்திகள்.

0Shares
  • ‘தாம் எதிர்த்த போதும் நீதிபதி பிணை வழங்கினார்’ வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளர்கள் ஒன்பது பேருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக நீதி சேவைகள் ஆணைக்குழுவில் வெல்லம்பிட்டி OIC முறைப்பாடு.
  • கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்ஸாவ் என்பவரின் மனைவியினது கொள்ளுப்பிட்டி ப்ளவர் வீதி வீட்டுக்கு சென்றிருந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த மௌலவி ஒருவரும் மாளிகாவத்தையை சேர்ந்த நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரார்த்தனை ஒன்றுக்காக இவர்கள் சென்றதாக சொல்லப்பட்ட போதிலும் அவர்களை கைது செய்தது பொலிஸ். இந்த வீட்டை சோதனையிட்ட பொலிஸ் அங்கிருந்த ட்ரோன் கெமரா ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளது.
  • தும்மோதர பகுதியில் வன்முறைக் குழுக்களுடன் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் ஒருவர் காணப்படுவது தொடர்பில் வெளியான காணொளியில், இருப்பவர் குறித்து இராணுவம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. குறித்த நபர் இராணுவ வீரர் என்பது உறுதியாகினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த நபர் தொடர்பில் 0112514280 அறிந்தால் இவ் இலக்கத்திற்கு அறிவிக்கவும் – இராணுவ பேச்சாளர்.
  • யாழ் மாவட்டத்தில் புகைப்பட நிலையங்கள், மற்றும் தனிப்பட்ட தேவைக்காக ட்ரோன் கேமரா வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் – யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி
  • நாட்டில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்க சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைப்பு.
  • சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் தொழிநுட்ப உதவிகளை வழங்க சீனா இலங்கையிடம் உறுதியளித்துள்ளது. இதற்காக விசேட குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது.சீன – இலங்கை ஜனாதிபதிமாருக்கிடையில் நடைபெற்ற பேச்சின்போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
  • கெக்கிராவ – மடாடுகமயில் வேன் – லொறி மோதி விபத்து மூவர் பலி, அறுவர் காயம்.
  • வெசாக் வாரத்தை முன்னிட்டு 20ம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அமித் வீரசிங்கவை 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
  • குளியாபிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கும், நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் குளியாபிட்டியவிற்கும் இடமாற்றம்.
  • பொலிஸ்மா அதிபரின் கீழ் இருந்த பயங்கரவாத விசாரணை பிரிவு சிஐடியின் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவில் இரவு 7 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்.
  • வெசாக் தினத்தை முன்னிட்டு 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்.
  • அந்தோனியார் ஆலய தற்கொலை குண்டுதாரி செல்ல பயன்படுத்திய வாகனத்தை வாங்கிய மற்றும் இருக்கைகளை பொருத்திய நபர் புதிய காத்தான்குடியில் கைது.
  • கைது செய்யப்பட்ட டேன் பிரியசாத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உட்பட 85 பேர் கைது செய்யப்பட்டு, சிஐடி மற்றும் ரிஜடியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  • குண்டு தாக்குதல் விசாரணை தொடர்பில் நான் உட்பட அமைச்சர்கள் எவரும் கருத்து கூறுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது, தொடர்பில் பொலிஸார் மட்டுமே கருத்து தெரிவிப்பார்கள் – பிரதமர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments