31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home உள்நாட்டுச் செய்திகள் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் - அமைச்சர்...

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இதற்கான முயற்சி சாத்தியமாவதற்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அதிகாரபூர்வமாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, சுமார் 400 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மன்னார் புனித மரியாள் மடு தேவாலய பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார். இதுவே இந்நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முதலாவது கத்தோலிக்க புனித தலமாகும். இது ஒரு நல்ல நடவடிக்கையாகும். எனவே இதை நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏக மனதாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இதே அடிப்படையில், திருஞானசம்பந்தரால் பாடப்பட்டு, இந்நாட்டில் தென்கைலாயம் என கொண்டாடப்படும் கிழக்கு கரையில் அமைய பெற்ற திருக்கோணேஸ்வரம், மேற்கு கரையில் அமையப்பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களையும், வட கோடியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் தலத்தையும், புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டுமென இந்நாட்டில் வாழும் இந்துக்கள் என்னிடம் கோரியுள்ளனர். இந்து மத விவகாரம் உங்களை சார்ந்த அமைச்சு விவகாரம் என்பதால், இதை உங்கள் கவனத்துக்கு அதிகாரபூர்வமாக கொண்டு வருகிறேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

பிரதமர்- அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு- தமிழ் மொழிபெயர்ப்பு இதோ

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்

கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...

Recent Comments