31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home உள்நாட்டுச் செய்திகள் மஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்­மா­னம்

மஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வர தீர்­மா­னம்

சீனா­விடம் நிதி பெற்­றமை தொடர்­பான குற்­றச்­சாட்­டிற்கு மஹிந்த ராஜ­பக்ஷ பதி­ல­ளிக்கத் தவறும் பட்­சத்தில் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வரவும், அடுத்த கட்ட சட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கவும் ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். இந்த விட­யங்­களை வலி­யு­றுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­ விற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்­வா­றான நட­வ­டிக்­கைளை தேசிய அர­சாங்கம் அனு­ம­திக்­காது. எனவே தனக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தில் விரைவில் விளக்­க­ம­ளிக்க  வேண்டும். அவ்­வாறு இல்லை என்றால் அவ­ருக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வ­தற்கும், பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்கி சட்ட நட­வ­டிக்கையை முன்­னெ­டுக்­கவும் ஆளும் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

பாரா­ளு­மன்­றத்தில் வெள்­ளிக்­கி­ழமை விஷேட சந்­திப்­பினை மேற்­கொண்ட போதே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதே போன்று 112 கோடி குற்­றச்­சாட்­டிற்கு பதி­ல­ளிக்­கு­மாறும் அவ்­வாறு இல்­லை­யென்றால் எதிர்­கொள்ள வேண்­டிய நெருக்­க­டிகள் குறித்தும்  வலி­யு­றுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சீன நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து 112 கோடி நிதி­யினை பெற்­றுக்­கொண்­டமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ இது­வ­ரையில் பதி­ல­ளிக்கவில்லை. குறித்த விடயம் தொடர்பில் கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்­திலும் கலந்­து­கொள்­ள­வு­மில்லை. இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளினால் மஹிந்த ராஜ­ப­க் ஷ மீதான நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ள­துடன் தேசிய அர­சி­யலில் சீனாவின் எல்லை மீறிய தலை­யீ­டு­களும் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளன.

நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் பிர­காரம் சீன நிறு­வனம் நிதி வழங்­கி­யதா? அந்த நிதி ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டதா? அந்த நிதிக்­கான நிபந்­த­ணைகள் என்ன? போன்ற கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கு­மாறு கடி­தத்தில் கோரப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துஷார இந்­துனில் உறு­திப்­ப­டுத்­தினார்.

நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதை மஹிந்த ராஜ­ப­க் ஷ தவிர்த்துக்கொள்கின்றமை சந்தேகம் வலுப்பெற காரணமாகியுள்ளது. எனவே விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

பிரதமர்- அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு- தமிழ் மொழிபெயர்ப்பு இதோ

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்

கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...

Recent Comments