ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுசம்பள அதிகரிப்பு மாத்திரம் போதாது பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன

சம்பள அதிகரிப்பு மாத்திரம் போதாது பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன

0Shares

அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமின்றி ஏனைய மக்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும்.

இந்த வரவு – செலவு திட்டம் மக்களுக்கு சிறப்பானதாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமின்றி நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை விட பொருட்களின் விலைகளைக் குறைப்பது சிறந்ததாகும்.

அதனை விடுத்து சம்பளத்தை அதிகரிப்பதாயின் அரச உத்தியோகத்தர்களது சம்பளம் மாத்திரமின்றி, தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

சரியாக நோயை இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிப்பதற்கான யோசனையையே நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.

எமது பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோமே தவிர, பொதுஜன பெரமுன சார்பில் வரவு – செலவு திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் இந்த வரவு – செலவு திட்டம் மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் என்றார். 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments