Sunday, July 3, 2022
Google search engine
Homeஉள்நாட்டுமீண்டும் மின்வெட்டு

மீண்டும் மின்வெட்டு

இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் (03) பகல் வேளையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments