வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களை நேற்றைய தினம் கைது செய்ததாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
திருகோணமலை மற்றும் சாம்பல் தீவு ஆகிய கடல் பிராந்தியங்களில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சாம்பல் தீவு பகுதியில் கடற்படை மற்றும் நிலாவெலி போலீசார் இணைந்து நேற்றிரவு நடத்திய சுற்றி வளைப்பில் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்