உள்ளூர் செய்திகள் செய்திகள்

முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில், முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இன்று (16) ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு அமர்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்தார்.சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தின் மூன்றாம் நாளுடன் இணைந்ததாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த மாநாட்டில் சீன டியான்யிங் இன் கோபரேசன், சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம், சீன தொலைத் தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட், சீன பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம், மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம், சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சீன எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் மற்றும் குவாங்சு பொதுப்போக்குவரத்து குழுமம் உட்பட பல முன்னணி சீன நிறுவனங்கள் பங்கேற்றன.அந்த நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன