நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா வியாபாரம் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விமானப்படை அதிகாரி ஒருவர் நேற்று மாலை சீதுவ பகுதியில் வைத்து 100 கிராம் ஹெரோயின் மற்றும் 400 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்துச் சென்ற நீர்கொழும்பு சிறைச்சாலை கைதி ஒருவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இரண்டு கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையிலிருந்து இந்த போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுக்கும் குழுவினர் தொலைபேசி ஊடாக கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதன் அடிப்படையில் குறித்த நபர்கள் போதைப்பொருட்களை வெவ்வேறு நபர்களிடம் ஒப்படைப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனூடாக கிடைக்கப்பெறும் பணம் போதைப்பொருள் வியாபாரியின் மனைவியினுடைய வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
deran news