ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஎஞ்­சிய உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்பு மனு கோர­லுக்­கான அறி­விப்பு டிசம்பர் 4 ஆம் திகதி

எஞ்­சிய உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்பு மனு கோர­லுக்­கான அறி­விப்பு டிசம்பர் 4 ஆம் திகதி

0Shares

பெப்­ர­வரி ஆரம்ப பகு­தியில் தேர்தல்

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் மீதான இடைக்­கால தடை நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் எஞ்­சி­யுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு பெப்­ர­வரி மாத ஆரம்­பத்தில் தேர்தல் நடத்­தப்­ப­டலாம் என்று தேர்தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் எஞ்­சி­யுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்பு கோர­லுக்­கான அறி்­விப்பு டிசம்பர் மாதம் நான்காம் திகதி விடுக்­கப்­படும் என்றும் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய குறிப்­பிட்­டுள்ளார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலை அமுல்­ப­டுத்­து­வதை நிறுத்­து­மாறு கோரி மேல் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கு மீதான விசா­ர­ணையின் போது கடந்த வாரம் குறித்த வர்த்­த­மா­னியை இடை­நி­றுத்­து­மாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­பட்­டி­ருந்­தது.

எனினும் தற்­போது குறித்த மனுவை தாக்கல் செய்த தரப்­பினர் உள்­ளூ­ராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதை அடுத்து குறித்த மனுவை மீளப் பெறு­வ­தற்கு நேற்­றைய தினம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர்.

அதன்­படி நேற்­றைய தினம் அது தொடர்பில் ஆராய்ந்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வர்த்­த­மானி மீதான இடைக்­கால தடையை நேற்று நீக்கிக் கொண்­டது.

இந்­நி­லையில் ஏற்­க­னவே 93 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு வேட்பு கோரப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் தற்­போது இடைக்­கால தடை நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் எஞ்­சி­யுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் நான்காம் திகதி விடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments