31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home உள்நாட்டுச் செய்திகள் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அழைத்து சென்ற பேருந்து விபத்து!

கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அழைத்து சென்ற பேருந்து விபத்து!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு பின்னர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தவர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் இருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

கண்காணிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியவர்களை மாத்தறைக்கு இரணுவத்தினர் ஏற்றிச்சென்ற போது பின்னால் வந்த மற்றுமொரு பேருந்து மோதியுள்ளது.

இதன்போது இராணுவத்தினர் இருவரும், மற்ற பேருந்தின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...

வியாபார நிலையம் உடைத்து திருட்டு

ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஊடரங்கு சட்ட...

Recent Comments