31 C
Negombo
Saturday, April 4, 2020
Home உள்நாட்டுச் செய்திகள் இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்

இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்

இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (08) புது டெல்லியில் அமைந்துள்ள ரஸ்டிரபதிபவனில் பாரத பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதன்போதே இந்திய பிரதமர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர், இந்தியா முழு இந்து சமுத்திரம் தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ளது. வெறுமனே இலங்கையின் நிலைப்பேறு தன்மை மற்றும் பாதுகாப்பு அமைதி ஆகியவற்றை உறுதிபடுத்துவது மாத்திரம் எமது நோக்கம் அல்ல. இதனால் இலங்கையுடனான எமது உறவு முதன்மையானது, கொள்கைகள் மற்றும் சமுத்திரக் கோட்பாடுகளுக்கு இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவோம். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு இந்தியாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கும் விடயங்களை வரவேற்கின்றோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் எமக்கிடையிலான கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொலிஸார் இந்தியாவின் முன்னணி பயிற்சி நிலையங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை முன்னெடுக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களுக்கு தேவையான சமத்துவம், நீதி, அமைதி மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என நம்புகின்றேன். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, இரு நாட்டின் கூட்டு பொருளாதார திட்டங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம். தீவிரவாதம் பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஆகவே தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக 50 மில்லியன் டொலரை கடனாக வழங்கியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இந்தியா வழங்குவதாக உறுதியளித்த கடன் உதவிகள் தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தினோம்.

இந்தியாவால் வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் இலங்கையில் கிராம புற மக்களின் நலன்களுக்கு பயன்படும்.´

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை இன்று முற்பகல் சந்தித்து கலந்துஐரயாடியமை குறிப்பிடதக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் மகாத்மா காந்தியின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

மேலும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைநகர் டெல்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் இன்று மாலை சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.

- Advertisment -

Most Popular

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த மின்னல் தாக்கம் ஏற்படலாம் என்ற சிவப்பு எச்சரிக்கையை காலநிலை அவதானத் திணைக்களம் இன்று சனிக்கிழமை விடுத்துள்ளது. சப்ரகமுவ, ஊவா மற்றும்...

32 வீத இலங்கையர்கள் வீட்டிற்குள் முடக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை முற்றாகத் தடுக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் 3 மாதங்களாக நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக பலியான நபர் பற்றிய திடுக் தகவல்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இறுதியாக உயிரிழந்த 44 வயது நபர் பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் 23ம் திகதி இத்தாலியில் இருந்து வந்திருந்தார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரொனா உயிரிழப்புகள்- மேலும் ஒருவர் பலி

கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட...

Recent Comments