ColourMedia
WhatsApp Channel
Homeவெளிநாட்டுராஜீவ் காந்தி கொலை வழக்கு-மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு-மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0Shares

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்தால், அது சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், அந்த தீர்மானத்துக்கு இதுவரை தமிழக ஆளுநர் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளார்.

இந்த நிலையில், 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும், நளினி, சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தன்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை என அந்த ஆட்கொணர்வு மனுவில் நளினி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தான் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்துக்கு இதுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

எனவே, தன்னை விடுதலை செய்யாமல் சிறையில் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளதால், உயர்நீதிமன்றில் தன்னை முன்னிலைப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மத்திய அரசின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயனம், ராஜகோபாலன் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதி அனுமதி கோரியதாகவும்,, அதற்கு பதிலளித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி மத்திய அரசு அனுப்பிய பதிலில், அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த முடிவு எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நளினி தரப்பு சட்டத்தரணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் மத்திய அரசு மனுதாரராக இல்லாத நிலையில், தானாக முன்வந்து மனு தாக்கல் செய்திருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து, மத்திய அரசை மனுதாரராக இணைத்த நீதிமன்றம், எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைத் தெரிவிக்குமாறும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி முகப்புத்தக கணக்குகள் குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் தங்கள் பெயர்களை மறைத்து போலியான பெயர்களில் காணக்குகள் வைத்திருப்பவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இவ்வாறான போலி சமூக ஊடகங்களே நாட்டின் இறையாண்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது இனங்களுக்கிடையில் முருகளை தோற்றுவிப்பதும் இவர்கள் தான்.

அடுத்தவர்கள் உழைப்பை திருடி தாங்கள் கஷ்ட்டப்பட்டு எழுதியது போல் பதிவு செய்பவர்கள் இவர்கள் அடுத்தவர் தந்தயையும் தங்கள் அப்பா என்று சொல்லும் கேவலமான எண்ணம் கொண்டவர்கள் இவர்களைபோன்றவர்கள் தங்கள் தாயை கூட விபச்சாரத்தில் ஈடுபடுத்துவார்கள் இவர்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments