31 C
Negombo
Saturday, April 4, 2020
Home உள்நாட்டுச் செய்திகள் ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்க திட்டம்

ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்க திட்டம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

பெறுபேறுகள் வெளியாகி, ஒரு வருடகாலம் வரை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த முறையை மறுசீரமைப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் கூறினார்.

அடுத்த வருடத்திலிருந்து இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்தாகவும் தெரிவித்தார்.

உயர்தரப் பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிடுவதற்கும் திட்டம் வகுக்கப்படுவதாகவும் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.

- Advertisment -

Most Popular

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த மின்னல் தாக்கம் ஏற்படலாம் என்ற சிவப்பு எச்சரிக்கையை காலநிலை அவதானத் திணைக்களம் இன்று சனிக்கிழமை விடுத்துள்ளது. சப்ரகமுவ, ஊவா மற்றும்...

32 வீத இலங்கையர்கள் வீட்டிற்குள் முடக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை முற்றாகத் தடுக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் 3 மாதங்களாக நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக பலியான நபர் பற்றிய திடுக் தகவல்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இறுதியாக உயிரிழந்த 44 வயது நபர் பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் 23ம் திகதி இத்தாலியில் இருந்து வந்திருந்தார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரொனா உயிரிழப்புகள்- மேலும் ஒருவர் பலி

கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட...

Recent Comments