ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஜனாதிபதியின் புதிய அதிரடி உத்தரவு..!

ஜனாதிபதியின் புதிய அதிரடி உத்தரவு..!

0Shares

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தூதுவராலயங்களுடன் நேரடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பணிப்புரை அமைச்சர்கள், மாகாண சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது.

இது உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்புக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முன்னர், உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

வெளியுறவுத்துறை அமைச்சு, நிதி அமைச்சு, சட்டமா அதிபர் மற்றும் மத்திய வங்கி போன்றவற்றின் அனுமதியும் பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல முதலீடுகள் இலங்கை முதலீட்டு சபை போன்ற அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்கப்படாத நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர, சில அமைச்சர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சரவையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சில ஒப்பந்தங்கள் உரிய பரிசீலனையின்றி மேற்கொள்ளப்பட்டதனால் அதன் தரம் சிறப்பாக அமையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments