31 C
Negombo
Tuesday, April 7, 2020
Home விளையாட்டு செய்திகள் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்...

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்…

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. குறித்த போட்டியானது மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டதோடு முதலாவது நாள் மற்றும் 5வது நாள் மட்டுமே ஆட்டம் முழுமையாக இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 102 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஷயீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய 5ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தானின் அபிட் அலி தமது கன்னி டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டமிழக்காமல் சதமடித்ததோடு, பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி கராச்சியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

பிரதமர்- அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு- தமிழ் மொழிபெயர்ப்பு இதோ

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய மருந்துப் பொருட்கள்

கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும்.

இனிமேல் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்...

Recent Comments