ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில் உள்ள முழுநேர உணவகங்கள் 8ற்கு எதிராக வழக்கு பதிவு.

நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில் உள்ள முழுநேர உணவகங்கள் 8ற்கு எதிராக வழக்கு பதிவு.

0Shares

மனித பாவனைக்கு தகாத உணவுகளை விற்பனை செய்து வந்த நீர்கொழும்பு பெரியமுல்லை உணவகம் 8ற்கு வழக்கு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதான பொது சுகாதார ஆய்வாளர் எச்.ஏ.யு.எல் குணரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(10) இரவு முழுநேர உணவகம் 15ஐ சோதனை செய்துள்ளார். இவற்றில் 8 உணவகங்களில் மனித பாவனைக்கு தகாத கோழிகழிவுகள் மற்றும் முட்டைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கொத்து ரொட்டி, முட்டை அப்பம்,பிரைட் ரைஸ் போன்ற உணவுகள் இருந்துள்ளன.

மேலும் சீனா , இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பொதி செய்யப்பட்ட லேபிள் அற்ற ஒரு தொகை துரித உணவுகளும் அசுத்தமான அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபையின் நகரபிதா தயான் லான்சா அவர்களின் அறிவித்தலின் படி நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி சமீர அபேசிங்க அவர்களின் அறிவுறுத்தலின் படி பிரதான பொது சுகாதார ஆய்வாளர் எச்.ஏ.யு.எல்.குணரத்ன அவர்களுடன் பொது சுகாதார ஆய்வாளர்களான டி.பி.பிரனான்து, மஞ்சுல சம்பத், இந்திக ஜயதுங்க, எஸ்.விஜேசிங்க இரான் அப்புஹாமி மற்றும் ஏ.யு இமந்த சம்பத் அபேசிங்க ஆகியோரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments