ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுபொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் மாத்தறை மக்கள் சக்தியில் -சஜித்

பொது மக்களுடன் கைகோர்த்தே மரணத்தை தழுவுவேன் மாத்தறை மக்கள் சக்தியில் -சஜித்

0Shares

மாளிகை வாழ்க்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இன்று மாலை மாத்தறை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

வார்த்தையின் அர்த்தத்தில் கூட இலங்கைக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய இலங்கை பாஸ்ட் எனும் வேலை திட்டத்தை தாங்கள் ஆரம்பித்ததாகவும்  இதன் போது அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

அடுத்துவரும் சில மாதங்களில் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். எந்தச் சந்தேகமும் இல்லை, சஜித் பிரேதாச இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவார்.

எந்த மக்கள் குழுவினரும் முன்னுரிமை அடிப்படையில் நடத்தப்பட மாட்டார்கள். எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள்.

நாடு பார்க்கும் மிகப் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான “முதல் இலங்கை” எனும் நிகழ்ச்சி திட்டத்தை நவம்பரில் உருவாக்குவோம்.

பொருளாதார வளர்ச்சியை வெறும் எண்ணிக்கையில் மட்டும் வரையறுக்க முடியாது, அதனை நாடு முழுவதும் உள்ள அனைவரும் அனுபவிக்க வேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக நாங்கள் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவோம்.

எங்கள் போர்வீரர்கள் எமது தெருக்களை சுத்தம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர்களைப் பணத்திற்கான கூலிப்படையாக மாற்ற அனுமதிக்க மாடடோம். நாட்டில் அவர்களுக்குத் தேவையான மரியாதை கிடைப்பதை நாம் உறுதி செய்வோம்.

நாங்கள் சூப்பரான ஆடம்பர வாழ்க்கை வாழ மாட்டோம். நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்க நாட்டு மக்களுடன் கஸ்டப்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

பிரபுக்களுக்கான குண்டு துளைக்காத வாகனங்களை விட கிராம மருத்துவ நிலையங்கள் சஜித்துக்கு முக்கியம். குண்டு துளைக்காத வாகனங்களையும் விட இலவச கல்வி, கிராம ஆலயங்கள், கிராமப்புர மகப்பேற்று கிளிக்குகள். இவை அனைத்தும் முக்கியம்!.

மக்கள் மத்தியிலேயே வளர்ந்தேன். மக்களுக்காகவே வாழ்கின்றேன். மக்களுக்காகவே மரணிப்பேன்.

தன்னை மாளிகைகளில் காண முடியாது எனவும் தன்னை காண வேண்டுமெனில் நாட்டில் உள்ள சிறிய கிராமங்களில் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது தந்தை போல் பொது மக்களுடன் கைகோர்த்து தனது மரணத்தை தழுவுவதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments