ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஇலங்கை ஊடாக கோயம்புத்தூரிற்குள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவல்- இந்திய புலனாய்வு தகவல்களால் பதற்றம்

இலங்கை ஊடாக கோயம்புத்தூரிற்குள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவல்- இந்திய புலனாய்வு தகவல்களால் பதற்றம்

0Shares

இலங்கை ஊடாக ஆறு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிற்குள் ஊருடுவியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளதை தொடர்ந்த அப்பகுதியில் அதிகாரிகள் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

லக்சர் இ- தைபா அமைப்பினை சேர்ந்த ஆறு பயங்கரவாதிகள் இலங்கை ஊடாக கோயம்புத்தூரிற்குள் நுழைந்துள்ளனர் என இந்திய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூரிற்குள் ஊருடுவியுள்ளவர்களில் ஐவர் இலங்கை முஸ்லீம்கள் எனவும் ஒருவர் பாக்கிஸ்தானை  சேர்ந்தவர் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்துக்கள் என்ற போர்வையில் இவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியின் பெயர் இலியாஸ் அலையஸ் எனவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த தகவலை தொடர்ந்து கோயம்புத்தூர் நகரப்பகுதியில் 1500ற்கும் அதிகமான பொலிஸார் சோதனைநடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வாகனங்கள் விடுதிகள் ஹோட்டல்களை சோதனையிட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரில் 1500ற்கும் அதிகமான பொலிஸாரை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்,பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் குறித்து புலனாய்வு பிரிவினரிடம் தகவல்களை பெற்றுவருகின்றோம் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரிகள் கோயில்கள் பேருந்து நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments