விசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது…!

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் அழுத்தம் இல்லாவிட்டால், மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவத்தின் விசாரணைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருந்ததாக ஓய்வுபெற்ற பிரதி காவல்துறைமா அதிபர் பாலித சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், நேற்றைய தினம் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் ஓய்வு பெற்ற காவல்துறைமா அதிபர் பாலித சிறிவர்தன முதலில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

இதன்போது அழுத்தம் கொடுத்தாக கூறப்படும் அசாத் சாலியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா என ஆணைக்குழுவின் அதிகாரிகள் வினவியுள்ளனர்.

இதற்கு பதில் வழங்கிய அவர், அசாத் சாலிக்கு இருந்த அரசியல் பலம் மற்றும் அரச தலைவர்களுடன் காணப்பட்ட உறவுகள் காரணமாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொள்ள தயக்கம் காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் இடம்பெற்ற போது பாலித சிறிவர்தன, கேகாலைக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றியிருந்தார்.

பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் காவல்துறை மருத்துவ சேவை பிரிவுக்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சர் விக்கும் சாமிக் பிரேமசிறி சாட்சியம் வழங்கினார்.

விசாரணைகள் உரிய முறையில் மேற்கொண்டிருந்தால் கொழும்பிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை ஏன் என இதன்போது ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடன் வழிநடத்தப்பட வேண்டும்

இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (08) புது டெல்லியில் அமைந்துள்ள ரஸ்டிரபதிபவனில் பாரத பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். […]

Subscribe US Now

error: Content is protected !!