பாலியல் துன்புறுத்தல் விவகாரம் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியது..

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடி வதை மற்றும் தொலைபேசி ஊடான பாலியல் துன்புறுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக பல்கலைக்கழக ஒழுக்காற்றுகுழு இன்று கூடியுள்ளது.

இன்று முற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மாணவர்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன்படி, மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ்அப் தகவல்கள், அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை காவற்துறையின் இணையவழி குற்றத்தடுப்பு பிரிவினர் ஊடாக விசாரணை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஊடாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை விரைவில் நடத்துவது உள்ளிட்ட மூன்று முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்;டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடி வதை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், மூத்த மாணவ ஆலோசகர்கள், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உள்ளிட்ட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இந்த கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது.

பின்னர் குறித்த ஒழுக்காற்று குழு இன்று பிற்பகல் கிளிநொச்சி வளாகத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்திருந்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டு பரிசீலனைக்கு

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் பாராளுமன்ற ஹன்சாட் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல்களின் ஒலிப் பதிவுகள் அடங்கிய இறுவட்டு தொடர்பில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய இறுவட்டை மேலும் பரிசீலித்து தேசிய ரீதியில் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள், பிரமுகர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தும் விடயங்கள், […]

Subscribe US Now

error: Content is protected !!