மேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை

கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (05) உத்தரவிட்டார்.

இந்த முறைப்பாடு இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகள் நீதவானால் வாசிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான் இரகசிய பொலிஸார் அறிவிக்கும் போது அங்கு சென்று தேவையான வாக்குமூலத்தினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சந்தேகநபர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் குறித்த வழங்கு எதிர்வரும் மே மாதம் 6 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

ஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்

உத்தேச ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற […]

Subscribe US Now

error: Content is protected !!