சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு!

நிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான அவர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது மன்றில் ஆஜராகாதமையினால் சிவாஜிலிங்கத்தை கைது செய்யுமாறு நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் இந்த போராட்டம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இவ்வாறாக இருவர் மீதான வழக்கு விசாரணைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினமும் நீதிமன்றிக்கு சமூகமளிக்காத நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(மேலே உள்ள புகைப்படம் பழையது)

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு

2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும். குறித்த உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பொது மக்களின் […]

Subscribe US Now

error: Content is protected !!