போதைப்பொருள் குற்றவாளிக்கு மரண தண்டனை

13.23 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 35 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) மரண தண்டனை விதித்தள்ளது.

கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த நபர் ஒருவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹின் குலதுங்கவினால் இந்த தண்டனை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆகஸ்ட் 22 ஆம் திகதி மாளிகாவத்தை பொலிஸாரினால் மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபரினால் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

நல்லவேளை பயணப்பொதிக்குள் கையை விடவில்லை - கட்டுநாயக்க விமான நிலையத்தில்...!

நீண்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்குமிங்கும் நடமாடியவாறு காணப்பட்டுள்ளார். இதன் போது குறித்த நபரை அவதானித்த கட்டுநாயக்க சுங்கப்பிரிவின் அதிகாரிகள் அவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அவரின் கடவு சீட்டு இலங்கைக்கு வருகைதந்தமைக்கான காரணங்கள் என அனைத்தும் உரிய வகையில் காணப்பட்டுள்ளது. ஆனால் விசாரணைகளின் போது […]

Subscribe US Now

error: Content is protected !!