தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எஸ்.ரி.எப் விஷேட நடவடிக்கை பிரிவு

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ்  விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் 24மணி நேரமும் இயங்கும்  விஷேட நடவடிக்கை பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டும்  நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின்  வழிகாட்டலின் கீழ் மேற்படி விஷேட நடவடிக்கை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என  பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயலில்  ஈடுப்படும் குழு, கப்பம் கோருபவர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள்  மற்றும் இது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்படுபவர்கள் தொடர்பில்  தகவல்கள் தெரிந்தவர்கள்  தகவல்களை வழங்கவும் முறைப்பாடுகளை பதிவு செய்யவும்  முடியும் என்று பொலிஸ் விஷேட அதிரடிப் படை பொது மக்களிடம் கோரிக்கை  விடுத்துள்ளது.

தகவல்கள் வழங்குபவர்கள் மற்றும் முறைப்பாடு  செய்பவர்களின் இரகசிய தன்மை பேணப்படும் என்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை   வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொது மக்கள் 0112 580 518, 0112 058 552,  0112 500 471, 0112 506 588மற்றும் 0112 589 741என்ற தொலைப்பேசி  இலக்கங்கள் அல்லது 0112 588 489,          0112 081 044என்ற பெக்ஸ் இலக்கங்கள் ஊடாக  தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்துக் கொள்ள முடியும் என்றும்  கோரப்பட்டுள்ளது.

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

போதைப்பொருள் குற்றவாளிக்கு மரண தண்டனை

13.23 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 35 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) மரண தண்டனை விதித்தள்ளது. கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த நபர் ஒருவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹின் குலதுங்கவினால் இந்த தண்டனை […]

Subscribe US Now

error: Content is protected !!