வத்தளை, களனி மற்றும் பியகம பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

வத்தளை, களனி மற்றும் பியகம பிரதேசங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (13) காலை 8 மணி தொடக்கம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பேலியகொடை, வத்தளை-மாபொல நகர சபைக்கு உட்பட்ட பகுதியிலேயே மேற்படி நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, களனி பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெந்தல, எலகந்த மற்றும் பள்ளியவத்த ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பியகம பிரதேச சபைக்கு உட்பட்ட மகுருவில வீதி, விஜேராம மாவத்தை, கே.ஈ.பெரேரா மாவத்தை, கோனவல, பமுணுவில மற்றும் பதலஹேனவத்த ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட குரல் பதிவுகள், அனுமதி பத்திரமற்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை குரல் பரிசோதனைக்காக தமது திணைக்களத்திற்கு அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். […]

Subscribe US Now

error: Content is protected !!